• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மோசடியில் ஈடுபட்ட நபரின் தாயாரை சிறை பிடித்த கிராம மக்கள்..,

ByKalamegam Viswanathan

Jan 11, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி பகுதி நடுத்தெருவை சேர்ந்தவர் சேதுராமன் மகன் ஜீவானந்தம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக அப்பகுதியில் நகை அடகு கடை வைத்து அடகு வாங்குவது மற்றும் ஏல சீட்டு, வட்டிக்கு பணம் கொடுத்து பைனான்ஸ் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

நகை அடகு வைத்தவர்கள் நகை திருப்புவதற்கு வந்தவர்களிடம் ரசீதையும் பணத்தையும் பெற்று நகை திருப்பி தருவதாக கூறி ஏமாற்றி வந்துள்ளாத கூறப்படுகிறது.

நாளடைவில் ஜீவானந்தம் மோசடி செய்து ஏமாற்றி வருகிறார் என்பது கிராம மக்கள் தெரிந்து ஜீவானந்தனிடம் கேட்டுள்ளனர்.

சுதாரித்துக் கொண்ட ஜீவானந்தம் இரவோடு இரவாக ஊரைவிட்டு குடும்பத்துடன் தலைமறைவானார்.

இது குறித்து அன்று சுமார் 300 பவுன் நகையும் ஏலச் சீட்டு பணம் சுமார் 15 லட்சமும் கொடுத்து ஏமாந்து விட்டதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து தலைமுறையான ஜீவானந்தத்தை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டு தமிழக அரச பொங்கல் தொகுப்புடன் ரூ 3 ஆயிரம் வழங்குவது தெரிந்த ஜீவானந்ததின் தாயார் ஜானகி 65. பொங்கல் தொகுப்பு மற்றும் பணத்தை வாங்குவதற்காக காரில் இரும்பாடி கிராமத்திற்கு நேற்றுஇரவு வந்துள்ளார்.

இதனையறிந்த பாதிக்கப்பட்ட மக்களும், கிராம மக்களும் ஜானகியம்மாளுடன் காரை சிறை பிடித்தனர். ஜானகி அம்மாளுடன் பாதிக்கப்பட்டவர்கள் கிராம மக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த சோழவந்தான் காவல்துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கிராம மக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கிராம மக்களிடமிருந்து ஜானகி அம்மாளை மீட்டு சோழவந்தான் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல காவல்துறையினர் முயற்சிப்பதால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

ஒரு வழியாக ஜானகி அம்மாளை மீட்டு சோழவந்தான் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அமர வைத்தனர் பணம் மற்றும்நகையை இழந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் சோழவந்தான் காவல் நிலைய வாசலில் நின்று எட்டு வருடங்களுக்கு முன்பு சீட்டு போட்டபோது கொடுத்த அட்டையை காண்பித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து காவல் நிலையத்திற்கு வந்த மதுரை குற்றப்பிரிவு போலீசார் ஜானகி அம்மாளிடம் ஜீவானந்தம் குறித்து விசாரித்து வருகின்றனர் எட்டு வருடங்களுக்கு முன்பு 300 பவுன் நகை மற்றும் பல லட்சம் ரூபாய் பணத்துடன் தலைமறைவான ஜீவானந்தம் குறித்து தற்போது வரை எந்த
தகவலும் தெரியாததால் பொதுமக்கள் தாங்கள் இழந்த பணம் நகை கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் காவல்நிலைய வாசலில் காத்திருந்தது பரிதாபமாக இருந்தது புகார் கொடுத்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு பதிவு செய்து முறையாக விசாரணை செய்திருந்தால் ஜீவானந்தத்தை பிடித்து பணத்தை மீட்டு இருக்கலாம் என கூறும் பொதுமக்கள் தற்போதாவது காவல் துறையினர் சுதாரித்து புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இழந்த பணத்தை பொதுமக்களுக்கு மீட்டு தர வேண்டுமென ஏகத்துடன் கூறினர்.