விமான நிலையங்களில் அவசர கால அழைப்புகள் , கட்டுபாட்டு அறை புதிய தகவல் தொழில்நுட்பம் ,பேரிடர் பயிற்ச்சி சோதனை ஒட்டம் நடைபெற்றது

கேரள மாநிலம் கொச்சின் விமான நிலையத்தில் இருந்து ஏர்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் பகல் 12 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.
மதுரை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஒத்தக்கடை சிலைமான் திருப்புவனம் திருமங்கலம் திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் 14 முறை சுற்றி சுற்றி வலம். வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து விமான நிலைய அதிகாரிடம் கேட்டபோது கொச்சியில் இருந்து இந்திய விமான போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான சிறியரக விமானம்
தகவல் தொழில் நுட்பம் , விமான நிலைய கட்டுப்பாட்டு அலைவரிசையில் செயல் பாடுகள், அவசரகால அழைப்புகள் போன்றவற்றிற்கான சோதனை ஓட்டம் நடைபெற்றதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சோதனைக்கு பின் விமானம் மதுரையிலிருந்து சென்னைக்கு மாலை 5 மணிக்கு. புறப்பட்டு சென்றது .




