அரியலூர் ஒன்றியம், தாமரைக்குளம்- கல்லங்குறிச்சி சாலையில், மாவட்ட அதிமுக சார்பில் 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலாளர், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ். இராஜேந்திரன் தலைமை வகித்து, மரக்கன்றுகளை நட்டு வைத்து பணியை தொடக்கி வைத்தார்.வேம்பு, மா, நீர்மருது,நாவல், மகிழம், சிசு, அரசம், பாதாம், புளிங்கன்று உள்ளிட்ட 500 மரக்கன்றுகள் நடப்பட்டன.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் ஓ.பி சங்கர், இணைச் செயலாளர் பிரேம்குமார், மாவட்ட அண்ணா தொழிற் சங்கச் செயலாளர் கல்லங்குறிச்சி பாஸ்கர், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் ஜீவா அரங்கநாதன், ஒன்றியச் செயலாளர்கள் பொய்யூர் பாலசுப்பிரமணியன், செல்வராசு, அருங்கால் ஜோதிவேல், அரியலுார் வடக்கு ஒன்றிய இணை செயலாளர் சுந்தரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




