அரியலூர் ஒன்றியம் , லிங்கத்தடிமேடு, வள்ளலார் கல்வி நிலையம்,அரசு உதவி பெறும் கே.ஆர்.வி நடுநிலைப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு எழுது பொருள்கள் மற்றும் சுகாதாரப் பொருள்கள் அரியலூர் மாவட்ட பிரம்மஸ்ரீ விஸ்வகர்மா ஐந்தொழில் தொழிலாளர் சங்கம் சார்பில், சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் தமிழரசன் பிறந்த நாளை முன்னிட்டு வழங்கப்பட்டது .

இந்நிகழ்ச்சிக்கு வள்ளலார் கல்வி நிலையச் செயலாளர் புகழேந்தி தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் பெ. சௌந்தரராஜன் அனைவரையும் வரவேற்று பேசுகையில்,கல்வி வாழ்க்கையை வாழ்வதற்கு உதவும் கருவியாகும்.திறன்களை வளர்த்துக் கொள்ளவும், நமது ஆர்வங்களை கண்டறியவும், நம்மை பாதுகாத்துக் கொள்ளவும், ஆரோக்கியமாக வாழவும், சுதந்திரமாக செயல்படவும் கல்வி அவசியம் என்று கூறினார்.அரியலூர் மாவட்ட பிரம்மஸ்ரீ விஸ்வகர்மா ஐந்தொழில் தொழிலாளர் சங்க தலைவர் திருமுருகன் மாணவர்களின் எதிர்காலம் குறித்தும் மாணவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள், பள்ளி வாழ்க்கை ஒரு பொற்காலம், விடாமுயற்சி வெற்றிக்கு வழி என்பது குறித்தும் கருத்துரை வழங்கினார்.


இந்நிகழ்விற்கு சங்கத்தின் நிர்வாகிகள் , பாலமுருகன், சிலம்பரசன், கொளஞ்சிநாதன், தனபால்,ராஜேந்திரன்,முருகன்,சேட்டு,ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்ச்சியில் இருபால் ஆசிரியர்கள் இருபால் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.





