• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கள்ள ஓட்டு மூலம் வெற்றி பெற தி.மு.க முயற்சி..,

BySeenu

Dec 14, 2025

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி பா.ஜ.க பூத் கமிட்டி கூட்டம் கோவை புலியகுளம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் உரையாற்றினார்.

அதில் கோவை தெற்கு தொகுதி தான் மக்கள் நீதி மையம் கட்சியை அரசியல் களத்தில் காணாமல் போகச் செய்த தொகுதி என அவர் தெரிவித்தார். மேலும் கள்ள ஓட்டு போடுவதற்கான முயற்சிகளுக்கு தி.மு.க அரசு நடவடிக்கை எடுப்பதை பா.ஜ.க எதிர்க்கிறது என்றும் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கூறும்போது :-

எஸ்.ஐ.ஆர் பணியில் கட்சி பாகுபாடு இன்றி அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியல் பெயர்கள் நீக்கும் நடவடிக்கை இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தினர் ஒருபுறம் எஸ்.ஐ.ஆர் பணியினை எதிர்ப்பது போன்ற நாடகமாடிக் கொண்டு பல்வேறு இடங்களில் அவர்கள் அரசு இருக்கின்ற காரணத்தால் அவர்களுடைய உள்ளாட்சி பிரதிநிதிகள் நிர்வாகிகள் பி.எல்.ஓ – க்களை மிரட்டுவது, அல்லது தவறுதலாக வாக்காளர்களை இணைப்பது என்று அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும், அதில் என்னென்ன வாய்ப்பு இருக்கிறதோ ? அங்கெல்லாம் தாங்கள் எதிர்த்து இருப்பதாக கூறியவர், ஆட்சேபனை பதிவு செய்ததாக தெரிவித்தார். எப்படி ?ஆனாலும் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் நேர்மையானதாக, உண்மையானதாக சந்தேகத்திற்கு இடம் இல்லாததாக மாற்ற வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் லட்சியத்திற்கு நாங்கள் அத்தனை அரசியல் கட்சியினுடைய தார்மீக கடமையாக பணியை செய்து கொண்டு உள்ளதாக தெரிவித்தார்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகின்ற சூழலை இந்த எஸ்.ஐ.ஆர் பணிகள் ஏற்படுத்திக் கொடுத்து உள்ளதாக கூறியவர், இப்பொழுது இருக்கின்ற வாக்காளர்களை சந்திப்பது, அந்தப் பகுதியில் உள்ள பிரச்சனைகளை புரிந்து கொள்வது, அதற்கு தீர்வு கொடுப்பது என கூடுதலாக மக்களின் பணிகளையும் பாரதிய ஜனதா கட்சி ஈடுபட்டுக் கொண்டு உள்ளதாக தெரிவித்தார்.

ஒவ்வொரு தொகுதிகளும் குறிப்பாக நகர்ப்புற பகுதிகளில் அதிகமாக வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்கள். இந்த நீக்கம் என்பது ஒவ்வொரு பூத் கமிட்டி அரசியல் கட்சியின் முகவரிகள் அவர்கள் சரியாகத் தான் நீக்கப்பட்டு இருக்கிறார்களா ?என்பதை சரிபார்க்க வேண்டும் என்றும் கூறினார்.

ஏனென்றால் பல்வேறு இடங்களில் எங்கள் கட்சியினுடைய நிர்வாகிகள் பெயர்களை கூட வாக்காளர் பட்டியலில் வீடு மாறிவிட்டார்கள் என்று உள்ளூர் அரசு அதிகாரிகளை வைத்து பல்வேறு முறையீடுகளை அரங்கேற்ற பார்க்கிறார்கள்.

இவற்றை எல்லாம் எச்சரிக்கையோடு பார்த்து சரியான வாக்காளர் பட்டியலை உருவாக்குவதற்கு தான் இன்றைய கூட்டம் நடைபெற்றுக் கொண்டு உள்ளதாக தெரிவித்தவர், .

இது ஒரு பயிற்சி வகுப்பு போலவும், அவர்களுக்கு பயிற்சி அளிப்பதாக தெரிவித்தவர். எந்த ?படிவங்கள் எதற்கு ?கொடுக்க வேண்டும் யாருக்கு ? கொடுப்பது எந்த மாற்றங்களை யாரிடம் ? பேச வேண்டும் என்ற விஷயங்களை எல்லாம் இந்த பயிற்சியில் சொல்லிக் கொடுத்துக் கொண்டு உள்ளதாக கூறினார்.

வாக்காளர் பட்டியலில் எவ்வளவு தூரம் அந்த வாக்காளர்களின் பணி நிறைவு பெற்று இருக்கிறது என்பதை பார்ப்பதற்கு தேர்தல் ஆணையம் முடிவுகளை எடுத்துக் கொண்டு உள்ளதாக கூறியவர், அதனால் எத்தனை தொகுதிகளில் 100% நிறைவு அடைந்து உள்ளது என்பதை தேர்தல் ஆணையம் பார்த்து முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

அமைச்சர் கே.என் நேரு மீதான குற்றச்சாட்டுகள் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும், அதற்காக அந்த அமைப்பே சொல்கின்ற போது அதைவிட முக்கியமாக தி.மு.க அமைச்சர்கள் இன்னும் காசு வாங்காமல் இருக்கிறார்கள் என்று மக்கள் இன்னுமா நம்புவார்கள் ? ஏனென்றால் இன்றைக்கு எல்லாம் துறைகளிலும் லஞ்சம், ஊழல் என்பது மழிந்து போய் இன்று ஆதாரங்களை கொடுத்து ஒரு அரசு அமைப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற சூழல் இருப்பதாகவும், இதற்குப் பிறகு மாநிலத்தின் உடைய முதலமைச்சர் கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருட்டுப் போகும் என்பது போன்று வைத்து உள்ளதாகவும், அவருக்கு விவரம் தெரியாமல் இருப்பதாகவும், அவருக்கு கீழ் இருக்கின்ற அமைச்சர்கள் என்னென்ன ?செய்கின்றார்கள் என்று கூட தெரியாமல் இருப்பதாகவும், அதனால் தான் இப்படி பேசுகிறார் ?என்றும், அதனால் தான் அமைச்சரவையில் ஜெயிலுக்குச் சென்ற அமைச்சர்கள் எல்லாம் எதற்கு வைத்துக் கொண்டு இருக்க வேண்டும், குற்ற வழக்கு இருக்கின்ற அமைச்சர்கள் எல்லாம் ஏன் வைத்து இருக்க வேண்டும் ? நேர்மையான அரசா ? தி.மு.க வுக்கும் நேர்மைக்கும் என்றைக்காவது சம்பந்தம் இருக்கா ?அதனால் இந்த மாநில அமைச்சர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் நீதிமன்றம் சரியான முறையில் விசாரணை செய்ய வேண்டும், மாநில அரசு அவர்கள் அதிகாரத்தில் இருப்பதால் சில நேரங்களில் அதை மூடி மறைப்பதற்காக, மிரட்டுவதற்காக முடிவு செய்வார்கள். ஏனென்றால் இங்கே இருக்கக் கூடிய முன்னாள் அமைச்சர் பொறுப்பு செந்தில் பாலாஜி என்ன கூறினர். ஆமாம் நாங்கள் காசு வாங்கி தான் வேலை செய்தோம் என்று சொன்னார். பிறகு திடீரென்று அவர் தியாகி ஆகிவிட்டார். திடீர் புதிய நிர்வாகி ஆகிவிட்டார், ஏனென்றால் அதிகமாக கொடுக்கிறார். அதனால் இவர்கள் மீது குற்ற வழக்கு இல்லை என்று உள்ளதா ? பொய் வழக்கு என்று சொல்ல முடியுமா ?அது பொய் வழக்கு என்று சொன்னால் அந்த ஆண்டவனுக்கே அடுக்காது என்றவர், கரூருக்கு சென்று பக்கம், பக்கமாக படித்தவரே முதலமைச்சர். இப்படிப்பட்ட அமைச்சர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார். இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள், மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். ஆனால் இவ்வளவு முக்கியத்துவமான குற்றச்சாட்டுகள் உள்ள அமைச்சரே இன்னும் அமைச்சரவையில் வைத்து தி.மு.க அரசு அழகு பார்த்து கொண்டு இருக்கிறது. என்றால் அந்த ஊழலை அவர்கள் ஆதரிக்கிறார்கள் என்பது தான் அர்த்தம் என்றார்.

விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமை திட்டம் தற்பொழுது கொடுக்க ஆரம்பித்து உள்ளது குறித்தான கேள்விக்கு.

தேர்தல் இன்னும் மூன்று மாதத்தில் வருகிறது. அதனால் பெண்களை எப்படி ? எல்லாம் ஏமாற்றலாம் என்று பார்ப்பார். தமிழகத்தில் இருக்கக் கூடிய பெண்களை, வெல்லும் பெண்கள், தமிழகப் பெண்கள் என்று ஒரு மாநாட்டை சென்னையில் நடத்தி உள்ளதாகவும் தமிழகத்தில் சிறப்பாக பங்காற்றிய பெண்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்தியதாகவும், ஆனால் மகளிர் சுய உதவி குழுவிற்காக மத்திய அரசாங்கம் கொடுத்த தொகையை திசை திருப்பி இந்த வெல்லும் தமிழக பெண்களை ஊரில் குருந்து கூட்டிக் கொண்டு வந்து வீடியோ, ஆடியோ எடுத்து மாநில அரசு செலவு பண்ணி உள்ளதாகவும், எந்தப் பெண்கள் சொந்த காலில் நின்று தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்று மத்தியிலே மோடி அவர்கள் தமிழகத்திற்கு அந்தத் தொகையை ஒதுக்கியதோ ? அந்தத் தொகையில் இருந்து பகுதியை எடுத்து திராவிட மாடல் அரசை புகழ்ந்து பேசுவதற்காக பெண்களுக்கு அந்தத் தொகையை செலவு செய்து, டிராமா மாடலுக்கு அரசு பணத்தை செலவு செய்ததாக குற்றம் சாட்டினார்.

அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் இருக்கின்ற பெண் அதிகாரிகள் நிறுத்தினார்கள். அது திராவிட மாடல் அரசாங்கத்தால் வந்தார்களா ? என கேள்வி எழுப்பியவர், என்ன அநியாயம் அந்தப் பெண் அரசு அதிகாரிகளை அவமானப்படுத்தி உள்ளதாக கூறியவர், அவர்களுடைய உழைப்பினால், அவர்கள் திறமையினால் பல்வேறு ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு அரசாங்கத்தினுடைய அதிகாரியாக வந்த பெண்களை எல்லாம் ஏதோ ஐந்தாண்டுகள் இவர்கள் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் தான் அந்த பெண்கள் எல்லாம் வந்தார்கள் என ஷோ கொண்டு உள்ளதாக விமர்சித்தார்.

அந்தப் பெண் அதிகாரிகள் தன்னுடைய உழைப்பை, அவர்களுடைய திறமையை அரசு கொச்சைப்படுத்தி உள்ளதாக சாடினார்.

வேறு வழியின்றி ஒரு அரசாங்கம் சொன்னால், ஒரு அரசு அதிகாரி செய்தாக வேண்டும் என்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அந்த அதிகாரிகளை இதுபோன்று நடத்துகிறது என்பது கடுமையான கண்டனத்துக்குரியது என்று கண்டனம் தெரிவித்தவர்

திராவிட முன்னேற்ற கழகம் ஏதாவது ஒரு நாடகத்தை நடத்தி, மக்களை ஏமாற்ற முடியுமா ? என்று பார்க்கிறார்கள்… அதனால் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அந்த நிகழ்ச்சிக்கு சினிமா இயக்குனர்கள், சினிமா நடிகர்கள் அவர்களுக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதை அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் அவர்களையெல்லாம் வலுக்கட்டாயமாக சில இடங்களில் கூட்டி வந்து அரசை பாராட்ட வைப்பதும், மிரட்டுவது இதெல்லாம் தி.மு.க விற்கு புதிதல்ல, இதற்கு முன்பு இதே போன்று தான் நடந்தது என்றவர், அந்த வேலைகளை தான் திரும்பவும் செய்து கொண்டு உள்ளதாக கூறினார்.

கேரளத்தில் இன்று மக்கள் பாரதிய ஜனதா கட்சி பக்கம் தங்களின் ஆதரவை கொடுத்துக் கொண்டு உள்ளதாக கூறியவர், அதிலும் குறிப்பாக சிறுபான்மையின மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய மாநிலமாக இருந்தாலும், கூட கேரளாவில் இன்று மத வேறுபாடுகளை தாண்டி இந்த நாடு முன்னேற வேண்டும் என்றால் வளர்ச்சி பெற வேண்டும் என்றால் பி.ஜே.பி முக்கியம் என்பதை கேரள மக்கள் உணர தொடங்கி விட்டார்கள். அதனுடைய ஆரம்பம் கட்டம் தான். இதற்கு ஒரு பெரிய வெற்றியை திருவனந்தபுரத்தில் வரலாற்று சாதனையை மக்கள் கொடுத்து உள்ளதாக அவர்களுக்கும் கேரளத்தின் பெண்கள் இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகித்ததாக அதுவும், மகளிர் அணியை சேர்ந்த பெண்கள் ஜெயித்து உள்ளதாகவும் கூறியவர், அனைவருக்கும் மகளிர் அணி தலைவி என்ற முறையில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

கூட்டணி தொகுதி பங்கீடு குறித்தான கேள்விக்கு

எத்தனை தொகுதி ? யார் வேட்பாளர் ? என அனைத்தையும் தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என்றும், மாநிலத்தில் இருக்கின்ற தலைவர், உறுப்பினர்கள் எல்லாம் வேலை செய்து கொண்டு உள்ளதாகவும் கூறினார்.

பொறுப்பு டி.ஐ.ஜி குறித்தான கேள்விக்கு ;

பொறுப்பே இல்லாத அரசாங்கம், எத்தனை பொறுப்பு யாருக்கு கொடுத்தால் தான் என்ன என்றார்.