• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் செயின் பறிப்பு..,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள நெடுவாக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் சின்னையன் இவரது மனைவி ராஜேஸ்வரி (60) விவசாய தொழில் பார்த்து வரும் இவர் இவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் இருக்கும் பெட்டிக்கடையில் குழந்தைகளுக்கு தின்பண்டம் வாங்கி சென்ற பொழுது ஒரத்தநாட்டில் இருந்து கந்தர்வகோட்டை நோக்கி செல்லும் சாலையில் பின் தொடர்ந்து வந்த ஹெல்மெட் அணிந்த இரண்டு மர்ம நபர்கள் ராஜேஸ்வரியை கீழே தள்ளி அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலி சங்கிலி பருத்தி சென்றனர்.

இதில் லேசான காயமடைந்த ராஜேஸ்வரி உடனடியாக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த பத்து பவுன் தாலிச் சங்கிலி அறுத்தது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.