கன்னியாகுமரியில் உள்ள பிரசித்தி பெற்ற தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில், ஆண்டு திருவிழாவும், ஆலயம் அடிக்கல் நாட்டி 125 ஆண்டு கொண்டாட்ட பெருவிழாவும் நேற்று (டிச. 5) மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாள் நடைபெறும் இத்திருவிழா டிசம்பர் 14-ஆம் தேதி வரை நடைபெறும்.

நேற்று அதிகாலை 6 மணிக்கு திருப்பலியுடன் விழா ஆரம்பமானது. காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நேர்ச்சைக்கொடி பவனி நடைபெற்றது. பின்னர் மாலை 6 மணிக்கு அருட்பணியாளர் ஜாண்ரூபஸ் தலைமையில் திருவிழா கொடி ஏற்றம் மற்றும் திருப்பலி நடத்தப்பட்டது. இரவு 9 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

திருவிழா நாட்களின் நிகழ்ச்சிகள்: தினமும் அதிகாலை 5 மணி, 6.15 மணி, 10.30 மணி – திருப்பலி, காலை 8 மணி – நற்கருணை ஆராதனை, மாலை 6.30 மணி – ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு பல்வேறு பங்குத்தந்தையர்கள் தலைமையில் திருப்பலி மற்றும் மறையுரை நடக்கிறது. தொடர்ந்து பள்ளி மாணவர் கலை நிகழ்ச்சிகள், அன்பியங்கள் ஆண்டு விழா, திருச்சப்பர பவனி உள்ளிட்டவை இரவு நடைபெறும்.
சிறப்பு நிகழ்ச்சிகள்: காலை 11 மணிக்கு நோயாளர்களுக்கான சிறப்பு திருப்பலி நடைபெறும். மாலை 6 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் ஆராதனையும் மறையுரையும் நடைபெறும். இரவு 9.30 மணிக்கு வாணவேடிக்கை மற்றும் புனித சூசையப்பர் தங்கத்தேர் பவனி நடைபெறும்.
தேர் பவனி மற்றும் நிறைவு விழா. அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேர் திருப்பலியும் காலை 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலியும் சென்னையின் மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் நடக்கிறது. தொடர்ந்து ஆங்கிலம், மலையாளம், தமிழ் மொழிகளில் திருப்பலிகள் நடக்கிறது.
மாதா மற்றும் சூசையப்பர் தங்கத்தேர் பவனிகன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தையர்கள் உபால்டு மரியதாசன், டாலன் டிவோட்டா, ஸ்டார்வின், ரூபன், டெமி உள்ளிட்டோர், அருட்சகோதரிகள் மற்றும் பங்குமக்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
மூன்று கடல்கள் சங்கம் பகுதியில் மதம் மொழி இன வேறுபாடின்றி மக்கள் புனித அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா காண்பது கன்னியாகுமரியில்
அன்று தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது. மதம் கடந்த மனித நேயம்.




