ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்ட செயலாளராகவும், கழக அமைப்புச் செயலாளராகவும், ராஜாபாளையம் யூனியனில் இரண்டு முறை சேர்மனாகவும் பணியாற்றியவர். வாரிய தலைவராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார்.

இது போன்று பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர் விநாயகமூர்த்தி. புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள், தலைமையில் விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக கட்சியை சிறப்பாக வழி நடத்தியவர். பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் வழியை பின்பற்றியவர். நேற்று முன்தினம் புதன்கிழமை காலமானார்.
அவரது இறுதி சடங்கு வெள்ளிக்கிழமை மதியம் ஒரு மணி அளவில் ராஜாபாளையத்தில் உள்ள ஜெய சக்தி மில்லில் வைத்து நடைபெறுகிறது.
இவருக்கு மனைவி வள்ளியம்மாள்,மூத்த மகன் விஜய ஆனந்த்,இவரது இளைய மகன் வினோத்குமார் சென்னை போயஸ் கார்டனில் பிரபலமான மஞ்சள் ஹோட்டல் நடத்தி வருகிறார்.








