மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் சேக்கிபட்டி கேசம்பட்டி பட்டூர் மேலவளவு, எட்டிமங்கலம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பல கிராமங்களை சேர்ந்த பள்ளி,கல்லுரி மாணவ மாணவியர்கள் மற்றும் தினக்கூலிகளாக வேலைக்கு செல்லும் பொதுமக்கள் காலை 7.10 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் சமுத்திரப்பட்டியில் இயக்கப்படும் M5A-அரசுப்பேருந்தில் சென்றால்தான் சரியான நேரத்திற்கு செல்ல முடியும் என்ற காரணத்தால் ஆபத்தான முறையில் பயணம் செய்கிறார்கள்.

அதற்கு பின்பு இயக்கப்படும் தனியார் பேருந்திலும் நிலைதான் இருக்கிறது.
இதற்கு காரணம் கடந்த காலங்களில் காலை 7.40 மணிக்கு சிறுகுடியில் இருந்து மேலூருக்கு இயக்கப்பட்ட M5A- அரசுப்பேருந்து இயக்கதான் எனவே மாணவ,மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி ஏற்கனவே காலை 7.40 மணிக்கு இயக்கப்பட்ட M5A-அரசுப்பேருந்தை தமிழ்நாடு போக்குவரத்துறையும் மற்றும் தமிழ்நாடு அரசும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.








