தேனி மாவட்ட செயலாளர் மள்ளர் பாலா தலைமையிலும் தேனி மாவட்ட தலைவர் வேந்தர் பாலா முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடத்துனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்டத்தில் அப்பாவி மக்களிடம் கோடிக்கணக்கில் பணம் சுரண்டும் கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும் ,
ஆண்டிபட்டி அருகே கண்டமனூர் பகுதியில் புதுக்குளம் கண்மாய் மற்றும் நீர் வழி தடங்களில் தனியார் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள உயர் மின்னழுத்த கோபுரங்களை அகற்றக் கோரியும்,
தேனி நகரில் தற்பொழுது ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது இதனால் போக்குவரத்து நெரிச்சல் ஏற்படும் நிலை ஏற்பட்டு வரும் நிலையில் விரைவாக ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகளை முடிக்க வேண்டும்
என்றும்,தேனி மாவட்டத்தில் பல்வேறு வீடுகள் மற்றும் விடுதிகளில் ,விபச்சாரத் தொழிலை செய்து வரும் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்
என்றும்,வருசநாடு மற்றும் கான விளக்கு காவல் நிலையங்களில் தேவேந்திரகுல வேளாளர் நபர்கள் மீது போடப்படும் பொய் வழக்குகள் போடுவதை தடுக்க வேண்டும்,

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறும் கனிமவளம் கொள்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும்
என்றும்,பெரியகுளம் மற்றும் ஆண்டிபட்டி பகுதிகளில் வசித்து வரும் நபர்களில் வீட்டுமனை பட்டா இல்லாத நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்
என்று கூறியும் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில்50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.








