தூத்துக்குடி திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வாக்காளா்களுக்கு தொிவித்துள்ள தகவலில் கூறியிருப்பதாவது

இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள எஸ்ஐஆர் வாக்காளர் திருத்த படிவம் கடந்த 4ம் தேதி முதல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 52 வாா்டுகளிலும் குடியிருக்கும் வாக்காளா்களுக்குஅரசு அலுவலா்களால் வழங்கப்பட்டு வருகிறது. அதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. அதற்கும் அரசு அலுவலா்கள் பல்வேறு வகையில் உதவிகள் செய்து வரும் நிலையில் கடந்த 2002ம் ஆண்டு வாக்காளா்கள் தாங்கள் பதிவு செய்த படி 2025ம் ஆண்டு படிவத்தில் நிரப்பபட்டு வழங்கப்பட வேண்டும் என்ற நடைமுறையை இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சிரமம் இன்றி தங்களது பாகம் எங்கு வருகிறது.
2002ம் ஆண்டு உங்களுடைய வாக்கு எங்கு இருந்தது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் வசதியாக பட்டியல் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. அதை 2025ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்திற்கு இதனை தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.








