மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் அதிக அளவிலான மனுக்களை வழங்கினர். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றினார். மேலக்கால் ஊராட்சி மற்றும் திருவேடகம் ஊராட்சிபொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பசும்பொன் மாறன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் விக்னேஷ் வரவேற்றார். இதில் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், திருவேடகம் சிபிஆர் சரவணன், ஒன்றிய அவைத் தலைவர் சுப்பிரமணி, முள்ளிப்பள்ளம்
முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா, ஒன்றிய துணைச் செயலாளர் சாந்திராஜா சோழராஜன், தொழிலாளர் முன்னேற்ற சங்க மேலக்கால் ராஜா, வட்டார வளர்ச்சி பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட வருவாய் துறை, இல்லம் தேடி கல்வி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகள் துறை, வருவாய் துறை, எரிசக்தி துறை, நுகர்வோர் கூட்டுறவு பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பாக அதிக அளவிலான மனுக்கள் பெறப்பட்டன.











; ?>)
; ?>)
; ?>)