அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் அழைப்பு.

மதிப்பிற்குரிய திரு. பி.டி.செல்வகுமார் அவர்களுக்கு,
வணக்கம்,
நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் மக்களாட்சி மாண்பைச் சிதைக்க, ஜனநாயகத்தைச் சின்னாபின்னப்படுத்தி, சந்தேகத்திற்குரிய வகையில், SIR என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்க முயற்சிக்கும் சதித் திட்டத்திற்கு எதிராகப் போராடவும். அடுத்தகட்ட செயல்பாடுகள் பற்றி ஆலோசிக்கவும் வருகின்ற நவம்பர் 2-ஆம் நாள் (ஞாயிறு) அன்று காலை 10.00 மணியளவில், தியாகராய நகரில் உள்ள “ஓட்டல் அக்கார்டில்” நடைபெறுகின்ற அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தாங்கள் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஜனநாயகத்தைக் காக்க, தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்து, SIR எனும் சதியை முறியடிப்போம்!
இவண்,
மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்.

 
                               
                  












; ?>)
; ?>)
; ?>)