• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

கழிவுநீர் கால்வாயில் இறந்த நிலையில் காணாமல் போனவர் உடல் கண்டெடுப்பு

சிவகங்கை பேருந்து நிலையம் அருகே கழிவுநீர் கால்வாயில் இறந்த நிலையில் காணாமல் போன டூ வீலர் மெக்கானிக்கின் உடல் கண்டெடுப்பு. சிவகங்கை நகர் போலீசார் விசாரணை.

சிவகங்கை பேருந்து நிலையம் அருகே, பிள்ளைவயல் காளியம்மன் கோயில் செல்லும் வழியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக சிவகங்கை நகர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதனையடுத்து, சம்பவம் இடம் வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் அப்பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் விஜி பாண்டியா என்பதும், நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போனவர் எனவும் தெரியவந்தது.

இதுகுறித்து ஏற்கனவே போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடிவந்த நிலையில், விஜி பாண்டியா கழிவு நீர் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார். மர்மமான முறையில் இறந்துள்ள நிலையில், கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இறந்த விஜி பாண்டியாவின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது, சிவகங்கை நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.