தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய இரண்டு நாட்கள் சனி (அக்டோபர் 18) மற்றும் ஞாயிறு (அக்டோபர் 19) என்பதால், வழக்கமான வார இறுதி விடுமுறையுடன் சேர்த்து இந்த ஆண்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது.

இந்த சூழ்நிலையில், தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வருவதால் தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாட வேண்டும் என வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு வருபவர்கள், அவசரமாக மீண்டும் திரும்பிச் செல்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளது.
அரசு மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தீபாவளி முடிந்த மறுநாளே வேலைக்கு செல்வது மிகவும் கஷ்டமானதாகவும் இருக்கும்.
எனவே, பொதுமக்கள் நலன் கருதி அக்டோபர் 21ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டால், பண்டிகைக்குப் பின் ஊரில் இருந்து திரும்புவோரின் சிரமம் குறையும் என்பது பொது மக்களின் விருப்பமாக உள்ளது.
இதே போன்று கடந்த ஆண்டுகளில் தீபாவளிக்கு முன்னோ அல்லது பின்னோ அரசு ஒரு நாளை கூடுதலாக விடுமுறை வழங்கி, அதன் ஈடாக வேறொரு சனிக்கிழமையை வேலை நாளாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. தமிழக முதல்வர் அவர்கள் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட தீபாவளிக்கு மறுநாள் விடுமுறையை அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என கலப்பை அமைப்பின் நிறுவனர் பி.டி.செல்வகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்..