அரியலூர் மாவட்டம், தத்தனூர் மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரியில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, அரியலூர் மாவட்ட காவல் துறை சார்பில் “ஒன்றிணை வோம்” மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தலைமையில் ,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்திரி, முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்வில்தொடர்ந்து ஒன்றிணைவோம் விழிப்புணர்வு தொடர்பாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணி ப்பாளர் .முத்தமிழ்செல்வன், வருவாய் கோட்டாட்சியர் ஆர் ஷீஜா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சுமதி, ஜெயங்கொண்டம் உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் இரவிச்சக்ரவர்த்தி, மாவட்ட மேலாளர் தாட்கோ லோகநாதன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு புள்ளியியல் ஆய்வாளர் பாப்பாத்தி, மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்கள் தலைவர் ரகுநாதன் மற்றும் இதர அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.