நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்;க்கும் நாள் கூட்டம்; மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (13.10.2025) நடைபெற்றது.

வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 189 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, பால்வளத்துறை மற்றும் தஞ்சாவூர் ஆவின் நிறுவனம் சார்பில் வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும் 13 பால் கூட்டுறவு சங்கங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 15 செயற்கை கருவூட்டாளர்களுக்கு, மாடுகள் செயற்கை கருவூட்டலுக்கு தேவைப்படும் 35 லிட்டர் திரவ நைட்ரஜன் மற்றும் 3 லிட்டர் திரவ நைட்ரஜன் பதப்படுத்தும் குடுவைகள், சினை ஊசி, முழு நீளக் கையுறை ஆகிய பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் தலா ரூபாய் 48,825ஃ- வீதம் 15 செயற்கை கருவூட்டாளர்களுக்கு ரூபாய் 6,57,375ஃ- மதிப்பீட்டிலான பொருட்களை 100 சதவீத மானியத்திலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 01 மாற்றுத்திறனாளிக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.வ.ப¬¬வணந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.ஆர்.கண்ணன், தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு. கோ.அரங்கநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு. கே.கார்த்திகேயன், மாவட்ட திட்டமிடல் அலுவலர் திரு.சண்முகம், பால்பத அலுவலர் டாக்டர் விஜயகுமார், உதவி பொது மேலாளர் (ஆவின்) டாக்டர் எஸ்.மாதவக்குமரன், முதுநிலை ஆய்வாளர் (பால்வளம்) திரு.இளங்கோவன், விரிவாக்க அலுவலர் திரு.ரமேஷ், திரு.சந்திரசேகர் மற்றும் நிர்வாகி (ஆவின்) திரு.சேகர் மற்றும் அரசு அலுவலர்கள்; கலந்து கொண்டனர்.