தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு நெடுஞ்சாலை துறை சார்பில் வடசேரியில் இருந்து முள்ளூர் பட்டிக்காடு வரை செல்லும் சாலை அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த சாலை மன்னார்குடியில் இருந்து சேதுபவாசத்திரம் வரை செல்லும் ஒரு போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த மாநில நெடுஞ்சாலை ஆகும். இந்த சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப தற்போது உள்ள இருவழிச் சாலையில் இருந்து கடின புருவங்களுடன் கூடிய மூன்று வழி சாலையாக அகலப்படுத்த நெடுஞ்சாலைத் துறை மூலம் முடிவு செய்யப்பட்டு தற்பொழுது மேம்பாடு செய்யும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்த சாலை பணிகளின் தரம் குறித்து தஞ்சாவூர் தர கட்டுப்பாடு நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ரேணுகோபால் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பர பரவத்தூர் அருகே விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள சாலை பணி பணிகளின் தரம் குறித்து தரக்கட்டுப்பாட்டு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சாலையின் நீள அகல மற்றும் அடர்த்தி தன்மைகளை பரிசோதனை செய்து தரத்தினை உறுதி செய்தனர். இந்த ஆய்வின் போது ஒரத்தநாடு இளநிலை பொறியாளர் ரகுமுன் நிஷா உடன் இருந்தார்.