அகில பாரத இந்து மகா சபா தஞ்சை மாவட்டம் சார்பில் இன்று காலை 11 மணி அளவில் சுவாமிமலை முருகன் கோவிலில் பாலியல் வழக்கில் கைதான அர்ச்சகர் மீது மறு விசாரணை செய்திட வலியுறுத்தியும்,

பணியாளர்கள் அல்லாத நபர்கள் ஆலயத்திற்குள் அனுமதி கூடாது மேலும் அர்ச்சகரை மிரட்டும் டீக்கடை முருகன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் துணை ஆணையர் அவர்களிடம் மனு கொடுத்து இருக்கிறோம்.
இந்த நிகழ்வில் அகில பாரத இந்து மகா சபாவின் மாநில பொதுச் செயலாளர் இராம நிரஞ்சன் ஜி தலைமையில் கொடுக்கப்பட்டது.
தஞ்சை மாவட்ட தலைவர் கராத்தே சங்கர் ஜி, மாவட்ட பொதுச் செயலாளர் தக்ஷிணாமூர்த்தி ஜி, மாவட்டச் செயலாளர் ராஜா தர்மர் மற்றும் விமல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.