புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் தோசை திருவிழா கடந்த 28-ம் தேதி தொடங்கியது. இந்த திருவிழாவானது நேற்றுடன் முடிவடைய உள்ள நிலையில் வாடிக்கையாளர்களின் வரவேற்பால் வருகிற 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த தோசை திருவிழாவில் காளான் தோசை, ராஜா ராணி தோசை, கறி தோசை, மட்டன் தோசை, இறால் தோசை, மகாராஜா தோசை, மில்லட் தோசை, இளநீர் தோசை, என 40 வகையான தோசைகள் தயார் செய்யப்பட்டது. அதேபோன்று புதினா சட்னி, மல்லி சட்னி, கடலை சட்னி, தேங்காய் சட்னி, வெங்காய சட்னி என 9 வகையான சட்னிகள் தயார் செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்பட்டது.

இந்த தோசை திருவிழாவில் புதுச்சேரி, மட்டும் இன்றி கடலூர், விழுப்புரம், திண்டிவனம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் மற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பங்கேற்று வகை வகையான தோசைகளை ஆர்வமுடன் வங்கி உண்டு மகிழ்ந்தனர்.
மேலும் பலவகையான தோசைகள் சாப்பிட்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.