விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த நாகராஜ் வயது 40 இவர் இப்பகுதியில் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தாயில்பட்டியைச் சேர்ந்த கடல் கன்னி, சித்துராஜபுரத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி ஆகியோரிடம் தவறான தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

மூன்று பேரும் சிவகாசி அருகே உள்ள அறையில் ஒன்றாக தங்கி இருந்தனர். அனைவரும் மது குடித்த நிலையில் அளவுக்கு மீறி மது அருந்தியதால் நாகராஜ் போதையில் தூங்கியதாக கூறப்படுகிறது. உடன் இருந்த கடல்கன்னியும் முருகேஸ்வரியும் இதனை பயன்படுத்தி நாகராஜன் களத்தில் இருந்த ஆறுபவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டனர் .
போதை தெளிந்ததும் பெண்களையும் காணவில்லை தனது கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியையும் காணததால் அதிர்ச்சி அடைந்தவர். சிவகாசி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். அதன் பேரில் தலைமறைவாக இருந்த கடல் கன்னியையும், முருகேஸ்வரியையும் உடனடியாக போலீசார் கைது செய்தனர்.