• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை வேலம்மாள் கிரிக்கெட் ஸ்டேடியம் 12.5 ஏக்கர்..,

ByKalamegam Viswanathan

Oct 8, 2025

மதுரை வேலம்மாள் கிரிக்கெட் ஸ்டேடியம் 12.5 ஏக்கரில் சுமார் 350 ரூபாய் கோடி செலவில் உருவாக்கப்படுகிறது

இங்கிலாந்து துபாய் நாட்டில் உள்ள கிரிக்கெட் வல்லுநர்களின் வழிகாட்டுதலின்படி கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய சூப்பர் கிங்ஸ் கேப்டனுமான தோனி நாளை திறந்து வைக்கிறார்

கரூர் சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசு வழிகாட்டுதலின்படி பார்வையாளர்கள் இன்றி திறக்கப்படும் வேலம்மாள் கிரிக்கெட் மைதானம்

முப்பதாயிரம் பார்வையாளர்கள் அமரும் வகையில் இயற்கை வசதி உள்ளது நவீன தொழில்நுட்பத்துடன் பகல் இரவு ஆட்டத்திற்கான மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது .

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி வருகையால் ஏராளமான ரசிகர்கள் திரள்வார்கள் என்ற காரணத்தினால் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக காவல் உதவிஆணையாளர்கள் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீஸார் வேலம்மாள் மான்மருத்துவமனை வளாகத்தில் குவிப்பு.