மதுரை முத்துப்பட்டியில் மரங்களை வெட்டியதால் தற்கொலை செய்து கொண்ட மரங்களின் காதலர் என அழைக்கப்பட்ட ஜெகதீஷ் குமார் நினைவாக மதுரை பசுமையாளர்கள் குழு முப்பது நாட்கள் தொடர்ச்சியாக மரக்கன்றுகள் நடுவது என தீர்மானித்தது.

அந்த தீர்மானத்தின் அடிப்படையில் ஒன்பதாம் நாள் நிகழ்வாக மதுரை எல்கேபி நகர் அரசு பள்ளி சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பாக மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர் தென்னவன், அறிவியல் ஆசிரியை விஜயலட்சுமி, உடற்கல்வி ஆசிரியர் சுகுமாறன் மற்றும் சுற்றுச்சூழல் மன்ற மாணவர்கள் கலந்து கொண்டனர்.