• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு11 பேர் காயம்..,

ByR. Vijay

Oct 6, 2025

நாகப்பட்டினம் நம்பியார் நகரை சேர்ந்தவர் சந்திரபாபு ( 60 ) இவருக்கு சொந்தமான பைபர் படகில் 5 தேதி மதியம் 2 மணிக்கு நம்பியா நகர் கடற்கரையிலிருந்து
விக்னேஷ் (28),விமல் (26),சுகுமார் ( 31 ),திருமுருகன் ( 31 ), முருகன் (38), அருண் (27) ஆகிய 6 பேர் /மீன்பிடிக்க சென்றனர்.

கோடியக்கரை கிழக்கே 8 மணியளவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர் அப்போது இலங்கையைச் சேர்ந்த இரண்டு படகில் எட்டு நபர்கள் வந்து மீனவர்களின் படகில் ஏறி இரும்பு கம்பி, கட்டை, கத்தி போன்ற ஆயுதங்களால் நாகப்பட்டினம் மீனவர்களை தாக்கி அவர்களிடம் இருந்த வெள்ளி செயின் 1 சுசுகி இஞ்சின் 1 செல் 1 GPS
லைட் பேட்டரி வாக்கி டாக்கி ஆகியவற்றை பறித்து சென்றனர்.

அதே போல் மற்றொரு பைபர் படகில் சசிகுமார் (30) சொந்தமான
சசிக்குமார், உதயசங்கர் (28), சிவசங்கர் ( 25 ),கிருபா ( 29 ), கமலேஷ் (19) ஆகிய 5 பேரும்
5ம் தேதி 2 மணிக்கு நம்பியார் நகரில் இருந்து புறப்பட்டுச் சென்று கோடியக்கரைக்கு கிழக்கு பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை நாட்டைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் இரண்டு படையில் எட்டு நபர்கள் வந்து நாகப்பட்டினம்
மீனவர்களை தாக்கி அவர்களிடம் இருந்து சுசுகி இஞ்சின், ஜிபிஎஸ், எக்கோ சவுண்டர், செல் – 5, 500 கிலோ வலை ஆகியவற்றை பறித்து சென்றனர்.

இரண்டு படகுகளில் சேர்த்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பலத்த காயம் அடைந்த சிவசங்கர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள 10 பேர் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து நாகப்பட்டினம் கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.