தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் 2 மண்டலம் குரோம்பேட்டை தனியார் பள்ளியில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு நலன் காக்கும் ஸ்டாலின் திட்டமுகாமை திறந்து வைத்து பார்வையிட்டனர். முகாமில் எழும்பு முறிவு, இரத்தசோகை, இருதய நோய், சிறுநீரகத்தால் ஏற்படும் தொற்றுநோய் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கான மருத்துவர்கள் செவிலியர்கள் அமைக்கப்பட்டு மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. மருத்துவ முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
இதில் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ், மண்டல குழுத் தலைவர் ஜோசப் அண்ணாதுரை மற்றும் அரசு அதிகாரிகள் மாநகராட்சி பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில் ஆட்சி பொறுபேற்ற நாள் முதல் அனைத்து துறைகளிலும் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார் எனவும், நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் பொது மருத்துவம், பல், கண், மூக்கு, காது தொண்டை மருத்துவம், இருதயம், நூரையிரல், கதிரியக்கம், குழந்தைகள், மகப்பேறு மருத்துவம் சித்தா என 17 வகையான மருத்துவ பிரிவுகள் வழங்கபட்டு வருகிறது எனவும் இது வரை நடைபெற்ற மருத்துவ முகாமில் 4 லட்சத்து 63 ஆயிரத்து 781 பேர் முழு உடற் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதை தனியார் மருத்துவமனையில் செய்தால் 20 முதல் 30 ஆயிரம் வரை செலவாகும் எனவும் தாம்பரம் தலைமை மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்திற்கு தேவையான உபகரணங்கள் அமைத்து முழுயானவுடன் நோயாளிகள் வெளியே செல்லாமல் முழு சிகிச்சை அளிக்கபடும், மருத்துவமனை வளாகத்தில் உள்ள சுகாதாரம் எவ்வாறு உள்ளது என விரைவில் ஆய்வு செய்ய உள்ளதாகவும், தொகுதிக்கு ஒரு இடம் அமைத்து அந்தந்த தெருநாய்கள் பராமரிக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.