• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

காலி பாட்டில் வாங்குவதினால் சுகாதார சீர்கேடு..,

BySeenu

Oct 3, 2025

கோவை விளாங்குறிச்சி ரோடு பீளமேடு பகுதியில் இருக்கும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கோவை முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் டாஸ்மாக் தொழில் சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் காத்து இருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுபான பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்ட மாட்டோம், காலி பாட்டில்களை வாங்க மாட்டோம் மேலும் நிர்வாகமே ஸ்டிக்கர் ஒட்டி கொடுக்க வேண்டும், பாட்டில்களை திரும்ப பெறுவதற்கு தனியாக ஆட்கள் நியமிக்க வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மண்டல மேலாளர் அலுவலகத்தில் இல்லை என்பதால் அவர் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கேட்டு காத்து இருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து ஊழியர்கள் கூறும்போது, 2003-ம் ஆண்டு டாஸ்மாக் நிறுவனம் மது விற்பனைக்காக தொடங்கப்பட்டது ஆனால் தற்போது அனைத்து வேலையிலும் வாங்கி பணி சுமை அதிகரித்து வருவதாக கூறியவர்கள்,

ஸ்டிக்கர் ஒட்டுவதனாலும், காலி பாட்டில்களை திரும்பிப் பெறுவதாலும் பணிச்சுமை அதிகரித்து வருவதாகவும் மேலும் எச்சில் பாட்டில்களை வாங்கும் போது டாஸ்மாக் ஊழியர்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு வருவதாக வேதனையை தெரிவித்தனர்.

தி.மு.க தேர்தல் வாக்குறுதி 159-யை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும், தி.மு.க ஆட்சியில் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினர்.