அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஊட்டியில் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை குறித்து விமர்சித்தது பெரும் பேசுபொருளாக மாறியது.

இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கோவையில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் எடப்பாடி பழனிச்சாமி, செல்வப் பெருந்தகை அவதூறாக பேசியதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்து பேசிய மாவட்ட தலைவர் விஜயகுமார், எடப்பாடி பழனிச்சாமி, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை குறித்து அவதூறாக பேசியதற்கு கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கண்டனத்தை பதிவு செய்தார். மேலும் அதிமுகவிலேயே பல்வேறு பிரச்சினைகள் உள்ள சூழ்நிலையில் அதை சரி செய்வது விட்டு விட்டு மற்ற கட்சித் தலைவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

இது தொடர்பாக அவதூறு வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனக் கூறி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும்,உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.. இதில் காங்கிரஸ் கட்சியின் மாநகராட்சி கவுன்சிலர்கள்,மாநில நிர்வாகிகள் மற்றும் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.