மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மதுரை மேற்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் ரங்கராஜபுரம், வயலூர், கட்டப்புளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஒன்பது பேர் கொண்ட பூத் கமிட்டி பாக பொறுப்பாளர் பயிற்சி முகாம் நடைபெற்றது .
இதற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பிஉதயகுமார் ஆலோசனை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் அப்துல் சமது, சதீஷ்குமார் ,முத்துக்குமார் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம் வி கருப்பையா, மாணிக்கம், ஒன்றிய கழகச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், செல்லம்பட்டி ராஜா, மாநில நிர்வாகிகள் தனராஜன், ராஜேஷ் கண்ணா, வக்கீல் கே.எம்.ராஜசேகரன், சுந்தர், ராகவன், சிவசக்தி, விருகை தர்மர், மனோகரன் மகளிர் அணி மகாலட்சுமி ரேவதி சாந்தி மாரிமுத்து வழக்கறிஞர் குருவித்துறை காசிநாதன் பொதும்பு ராகுல் உட்பட பலர் கலந்து கொண்டனர்
ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி தருவோம் என்று கூறினார்கள் .39 நாடாளுமன்ற உறுப்பினர்களை கையில் வைத்து இருந்தும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு கூட சம்பளத்தை கடந்த ஆறு மாதமாக பெற்றுத் தரவில்லை .ஆனால் எடப்பாடியார் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து 2,999 கோடியை பெற்றுத் தந்தார். கல்விக்கு கூட நிதியை கூட பெற்று தர முடியவில்லை ஆனால் விளம்பரம் பக்கம் பக்கமாக கொடுக்கிறார்கள்.
மதுரை மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் செய்து கொடுத்தார்கள் .ஆனால் திமுக கடந்த நான்கரை ஆண்டு காலம் என்ன செய்தது என்பதை விவாதம் செய்ய நான் தயாராக இருக்கிறேன் உதயநிதி ஸ்டாலின் தயாரா?
கடந்த நான்கரை ஆண்டு காலம் தமிழக மக்களுக்கு தவித்த வாய்க்கு தண்ணீர் கூட கொடுக்கவில்லை ஆனால் இன்றைக்கு உதயநிதி ஸ்டாலினை அழைத்து ஷோ நடத்துகிறார்கள் தமிழ்நாட்டு மக்கள் இந்த ஷோவைக் கண்டு ஏமாற மாட்டார்கள் ஸ்டாலின் நடத்துவது மேஜிக் ஷோ, ஆனால் எடப்பாடியார் நடத்துவது ரியல் ஷோ ஆகும்
இன்றைக்கு அரசு விடுதிகளை சமூக நீதி விடுதி என்று பெயரை மாற்றினார்கள் இதனைத் தொடர்ந்து பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த விடுதிகளில் அடிப்படை வசதிகள் சரிவர செய்யப்படவில்லை
தற்போது திருமங்கலம் தொகுதியில் உள்ள செக்கானூரணி அரசு கள்ளர் விடுதியில் 100 மாணவர்கள் இருந்து வருகிறார்கள் இதில் ஒரே அறையில் நான்கு மாணவர்கள் இருந்தனர் இதில் ஒரு மாணவனை சக மாணவர்கள் நிர்வாணப்படுத்தி வீடியோ அடுத்து அவரது அப்பாவிற்கு அனுப்பி வைத்துள்ளனர் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இது எதையும் கேள்வி கேட்காமல் ஒரு கேவலமானஅரசாக உள்ளது
இது போன்ற மக்கள் விரோத செயல்களை எல்லாம் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் .குறிப்பாக காலையிலும்,மாலையிலும் ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டு தினந்தோறும் மக்களை சந்தித்து திமுகவின் அவலங்களை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.அனைத்து வாக்குச்சாவடிகளும் அதிமுக முதன்மை இடத்தில் இருக்க வேண்டும்
இன்றைக்கு தமிழகத்தில் 68,500 மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ளது தற்போது கூடுதலாக 5000 வாக்குச்சாவடிகளை இணைக்கப்பட்டுள்ளது .இன்றைக்கு 68,500 மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் கிளைக்கழகம் உள்ள ஒரே கட்சி அதிமுக தான்
மதுரைக்கு ஆய்வு மேற்கொள்ள வருகை தரும் உதயநிதி மதுரை மாவட்டத்தில் நடைபெறும் கனிமவள கொள்ளை குறித்து ஆய்வு மேற்கொள்வாரா
இவ்வாறு பேசினார்