ஓரணியில் தமிழ்நாடு முப்பெரும் விழா தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான I.P.செந்தில்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,
- ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வருவார். அடுத்த முறையும் திமுக ஆட்சி அமைவது உறுதி.
- யாரையும் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் திமுகவிற்கு கிடையாது.
- மிகப்பெரிய தலைவர்களை வென்றுள்ள இயக்கம் திமுக
- திமுகவைப் பார்த்துதான் அஞ்சவேண்டும்.
திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என விஜய் கூறியது குறித்த கேள்விக்கு

- மோடி மற்றும் அதிமுகவிடம் முதலில் விஜய் கேட்க வேண்டும்.
- அதிமுகவை பற்றி ஒரு வரி கூட விஜய் பேசவில்லை.
- மோடியை பற்றி பாசாங்காக பேசி போய்க் கொண்டு உள்ளார்.
- திமுக குறித்தும் முதல்வர் குறித்தும் மட்டுமே பேசிக் கொண்டே இருக்கிறார்.
- 505 வாக்குறுதிகள் திமுக கொடுத்துள்ளது. இதில், 70 முதல் 80 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. எந்த திட்டங்கள் என முதல்வர், துணை முதல்வர் கூட்டங்களில் பேசியுள்ளனர்
- திமுகவில் அண்ணா, கருணாநிதி மூன்றாம் கட்ட தலைவர் ஸ்டாலின் என அனைவரும் கண்டிப்பாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூடியவர்கள்.
- தமிழ்நாட்டின் பொருளாதார சூழ்நிலை குறித்து விஜய்க்கு தெரியுமா?
- மின்சார வாரியத்தில் 1.5 கோடி கடன் உள்ளது. பசுமை தீர்ப்பாயத்தில் விளக்கம் கொடுக்கும் நிலைமைக்கு தமிழக அரசு உள்ளது இதற்கு காரணம் யார்?
- 2011 முதல் 2021 வரை ஆட்சி செய்த அதிமுக குறிப்பாக ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கஜானாவை மொத்தமாக சுரண்டி காலி செய்து வைத்திருந்தனர்.
பல்வேறு திட்டங்களை இந்த அரசு செய்துள்ளது எனவே, விஜய் கவலைப்பட வேண்டாம். தமிழ்நாடு முதலமைச்சர் மீண்டும் 2வது முறை ஆட்சிக்கு வந்து சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவார். அதை விஜய் பார்ப்பார்.
- நமக்கு தலைக்கு மேல் கடனை வாங்கிவிட்டு போய்விட்டார்கள்.இந்த நிலையில் தான் மு க ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
- 14 ஆண்டுகளுக்குப் பின்பு இரட்டை இலக்க பொருளாதாரம் வளர்ச்சியை தமிழ்நாடு தொட்டுள்ளது.
- வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்
- தனிநபர் வருமானமும், குடும்ப பொருளாதரமும் தமிழ்நாட்டில் உயர்ந்துள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது.
- பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டும். பொருளாதாரத்தை வளர்ச்சிக்கு கொண்டு செல்ல வேண்டும் அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.
- சரி விகித வளர்ச்சி என்பதுதான் நிர்வாகத்தின் திறமை.
- விஜய் கவலைப்பட வேண்டாம், கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
- பெரியார், அண்ணா மற்றும் திமுக இல்லை என்று சொன்னால் விஜய் இன்று சுதந்திரமாக பேசி இருக்க முடியாது.
- விஜய் கல்வி மருத்துவம் மற்றும் வாழ்வியல் இதில் முக்கியத்துவம் செலுத்துவேன் என தெரிவித்திருந்தார்.
- அதிமுக ஆட்சியில் செயல்படாமல் இருந்த பள்ளி கட்டிடங்கள் அனைத்துக்கும் ரூ. 7000 கோடி செலவு செய்து புதிய பள்ளி கட்டிடங்களாக உருவாக்கப்பட்டுள்ளது.
- அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.
- காலை உணவு திட்டம், கல்லூரி மாணவர்களுக்கான திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது
- தமிழ்நாட்டில் 2.24 கோடி நபர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை நேரடியாக வீட்டிற்கு சென்று மருத்துவ வசதி செய்யும் மக்களை தேடி மருத்துவ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
- மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்திற்கு தமிழ்நாட்டிற்கு ஐநா விருது வழங்கியுள்ளது.
- பள்ளி மற்றும் மருத்துவத்தில் பல்வேறு வசதிகளை தமிழ்நாடு அரசு செய்துள்ளது அதற்கான ஆதாரங்கள் அரசிடம் உள்ளது.
- பல்வேறு திட்டங்களை இந்த அரசு செய்துள்ளது எனவே, விஜய் கவலைப்பட வேண்டாம். தமிழ்நாடு முதலமைச்சர் மீண்டும் 2வது முறை ஆட்சிக்கு வந்து சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவார். அதை விஜய் பார்ப்பார். மாணவர்களுக்கு மடிக்கணினி மற்றும் குடிமராமத்து பணிகள் நிறுத்தியதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு
- குடிமராமத்து பணிகள் கொண்டு வந்தது அதிமுக கட்சியில் உள்ளவர்களை குளிர்விப்பதற்காகவே.
- குடிமராமத்து பணிகள் எங்கு நடந்தது அதனால் யாருக்கு என்ன பயன் இருந்தது?
- குறிப்பிட்ட பகுதியில் குடிமராமத்து பணிகளால் பயனடைந்துள்ளனர் அதனை மறுக்கவில்லை.
- சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளது பல இடங்களில் திட்டம் மக்களை சென்றடையவில்லை.
- 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி தயாராகி வருகிறது. இந்த வருடம் வழங்கப்பட உள்ளது.
இந்தியாவிலேயே அதிகமாக கடன் வாங்கியது தமிழ்நாடு அரசுதான் என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு

- அதிமுக அரசு இருந்தபோதும் வாங்கிய கடன் இருக்கு வட்டிக்கட்ட முடியாத நிலையில் தமிழ்நாடு அரசு இருந்தது.
- எல்லா அரசும் கடன்களை வாங்கும் ஆனால் கடனை முறையாக கட்ட வேண்டும்.
- மஞ்ச நோட்டீஸ் வழங்கும் நிலைக்கு தான் தமிழ்நாட்டை விட்டுச் சென்றது அதிமுக.
- திமுக அரசு வாங்கிய கடனை திரும்ப அடைக்கும்
- வரி உயர்வுக்கு காரணம் அதிமுகவே அதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது.
- உதாய் மின் திட்டத்தில் அதிமுக கையெழுத்து போட்டதே மின்சார கட்டண உயர்வுக்கு காரணம்.
- பரிசீலனையும் கருத்து சொல்லும் இடத்தில் மட்டுமே தமிழ்நாடு அரசு இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
- தமிழ்நாடு மக்கள் மீது கல்லை போடும் அளவுக்கு நிலையை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால் முதலமைச்சர் மக்களை காப்பாற்றுவார். அந்த சூழ்நிலையை ஏற்படுத்தியது அதிமுக எடப்பாடி பழனிச்சாமி மத்தியில் இருக்கக்கூடிய பாஜக
- உரிய நிதி பகிர்வை தமிழ்நாட்டில் இருக்க தந்தாலே போதுமானது.
- தமிழக மக்களை வளமான பயணம் நோக்கி அழைத்துச் செல்வோம்.
உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் அதிக பணி சுமை இருப்பதாக வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம் குறித்த கேள்விக்கு
- அனைத்து முகங்களிலும் அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொள்ள வேண்டிய சூழல் எழுந்துள்ளது.
- ஒவ்வொரு முகாம்களிலும் 1200 மனுக்கள் வருகின்றன. அதனை பரிசளிக்க வேண்டும். அதனை அரசுக்கு அனுப்ப வேண்டும்.
- சுமை இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
- அரசு அலுவலர்களாக இருந்தாலும் சரி. ஆட்சியில் இருக்கக்கூடிய முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி இந்த சுமையை சுகமாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால் மக்களுக்காக…