தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு, வழிகாட்டுதலின் படி, அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து நீதிமன்றங்களிலும் குறிப்பாக அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம், ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க 13.09.2025 இன்று அரியலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பாக தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

மேற்படி தேசிய மக்கள் நீதிமன்றத்தினை டி மலர்வாலண்டினா, முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மற்றும் தலைவர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தலைமை ஏற்று துவக்கி வைத்தார். மேற்படி தேசிய மக்கள் நீதிமன்றத்தில் முதல் அமர்வில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி எம் எஸ் மணிமேகலை, மற்றும் முதன்மை சார்பு நீதிபதி பிஎம் ரைஹானா பர்வீன் தலைமை தாங்கினர். 2-ஆம் அமர்வில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கே இன்ப கார்த்திக் மற்றும் கூடுதல் சார்பு நீதிபதி வி ராஜா தலைமை தாங்கினர். 3-ஆம் அமர்வில் நீதித்துறை நடுவர் ஆர் சங்கீதா சேகர், தலைமை தாங்கினார். 4-ஆம் அமர்வில் நீதித்துறை நடுவர் எஸ் ஸ்வப்னா, தலைமை தாங்கினார்.

ஜெயங்கொண்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் சிறப்பு சார்பு நீதிபதி வி பிரேம்குமார், கூடுதல் உரிமையியல் நீதிபதி எம் எஸ் கண்ணதாசன், மற்றும் நீதித்துறை நடுவர் எண். 2 எம் பாலமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
செந்துறையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜிவரதராஜன் மற்றும் வழக்கறிஞர் வி செல்வமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வுகளில் 2,762 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டதில் 08சிவில்வழக்குகளுக்கு ரூ.70,00,000/-ம், 66 மோட்டார் வாகன விபத்துவழக்குகளுக்கு ரூ.3,83,23,500/-ம்,793 சிறு குற்ற வழக்குக ளுக்குரூ.7,59,000/-ம்,01 குடும்ப வன்முறை வழக்கும்,மேலும் ஜெயங்கொண்டம் நிலம்கையகப்படுத்துதல் வழக்கில் 270 வழக்கும் தீர்வு காணப்பட்டது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கி வழக்குகளில் வங்கிவழக்குகளுக்கான அமர்விற்கு ஓய்வு பெற்ற நீதிபதி என் முத்துகிருஷ்ணன் மற்றும் எம்.ஜி செல்வ ராஜ் கலந்து கொண்டனர் மேற்படி வங்கியில் 82 வழக்கு களில் ரூ. 92,42,500/-ம் தீர்வு காணப்பட்டது.
மேற்படி தேசிய மக்கள் நீதிமன்றத்தி ற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் ஆர் ராதாகிருஷ்ணன் சிறப்பாக செய்திருந்தார். இந்நிகழ்ச்சிகளில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் காவல்துறையினர், அரசு அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் , வழக்காடிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.











; ?>)
; ?>)
; ?>)