கன்னியாகுமரியை அடுத்துள்ள விவேகானந்தா கலைக் கல்லூரியின்
57_ வது பட்டமளிப்பு விழா இன்று (செப்டம்பர்_13)ம் நாள். தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பட்டமளிப்பு உரையாற்றினார். கல்வி மட்டுமே நம்மை சமூகத்தில் உயர்ந்தவர்களாக மாற்றும்.

இந்திய சுதந்திரத்திற்கு முன் உயர் சாதியினருக்கு மட்டுமே கல்வி என்ற நிலையை மாற்றியது , இந்திய சுதந்திரம் தான். கல்வி ஒரு சாதியினருக்கு மட்டுமே உரிமை என்று இருந்த நிலையை மாற்றி அனைவருக்கும் கல்வி.
தமிழகத்தில் இராஜாஜி முதல்வராக இருந்த போது குலக்கல்வி என்ற திட்டத்தை கொண்டு வந்தார், பல்ப் பள்ளிகளை மூடினார். பெரும் தலைவர் காமராஜர் பள்ளிகள் இல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலையை தமிழகத்தில் உருவாக்கினார். அத்தகைய உணர்வில் ஒன்றிய அரசு. கல்வியில் 3,5,8,ம் வகுப்புகளுக்கு அரசு தேர்வை கொண்டு வந்து, இதில் எந்த நிலை தேர்வில் வெற்றியை,எட்டமுடியாதவர்களின் பலரின் கல்வி தடைப்பட்டு தந்தை தொழிலை செய்ய செல்லும் நிலைக்கு ஒன்றிய அரசின் திட்டம் இட்ட நிலையில் தமிழகத்தில் அந்த திட்டத்தை(பொதுத் தேர்வை) தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் தடுத்து நிறுத்தியது மட்டுமே அல்ல.

ஒன்றிய அரசின் தமிழகத்தில் மூன்று மொழி திட்டத்தை, தமிழகத்தில் பின்பற்றமாட்டோம். தமிழகத்தில் இரண்டு மொழி கொள்கையே தொடரும் என தமிழக முதல்வர் அறிவித்தது மட்டும் அல்ல. ஒன்றிய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய கல்வி உதவித்தொகை யூ.20,158 கோடியே தர மறுத்த நிலையிலும், ஒன்றிய அரசு தமிழகத்திற்கு உரிமையான கல்வி தொகையை மறுத்தாலும். எங்கள் பிள்ளைகளின் கல்விக்கு எத்தனை ஆயிரம் கோடி நிதியையும் செலவு செய்து படிக்கவைப்போம் என ஒன்றிய அரசிற்கு பதிலடி கொடுத்து வருபவர் நம் தமிழக முதல்வர் என சபாநாயகர் அப்பாவு அவரது உரையில் தெரிவித்தார்.
கல்லூரி நிர்வாகத்திற்கு ஒரு கோரிக்கையை வைத்தார். கல்லூரி வகுப்புகளுக்கு பின் வாரத்திற்கு ஒன்று, இரண்டு நாட்கள் மாணவர்களுக்கு தனியாக ஆங்கில வகுப்பு நடத்தி நம் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆங்கிலத்தை கூச்சம் இல்லாமல் சகஜமாக பேசும் திறனையும் உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இருபால் மாணவர்களுக்கு பட்டம் சான்றிதழை
சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி பட்டமளிப்பு விழாவில். கல்லுாரியின் தலைவர் பாலமுருகன், கல்லூரி செயலாளர் ராஜன், கல்லூரி முதல்வர் முனைவர். மகேஷ், துறைத் தலைவர்கள் பங்கேற்றனர்.