அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு தொடங்கி வைத்தார். கன்னியாகுமரி முருகன் குன்றம் அருகேயுள்ள கிளாரட் 4 சவேரியார்புரம் சுனாமி காலனியில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் ஒயிட் மெமோரியல் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமை அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு தொடங்கி வைத்தார். இதில் மருத்துவர்கள் அருண், பாலு, ஜெரோபியா மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு சிகிச்சையளித்தனர்.

முகாம் ஏற்பாடுகளை, கன்னியாகுமரி, அலங்கார உபகார மாதா தேவாலயம் 99_வது அன்பிய உறுப்பினர் கிளாரட் நகரைச் சேர்ந்த திமுக பூத் டிஜிட்டல் முகவர் ஷர்மிளா செய்திருந்தார்.
