தஞ்சையிலுள்ள தனியார் கூட்டரங்கில் வரலாறு மீட்புக் குழுவின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வரலாறு மீட்புக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் பச்சை மனிதர் தங்க சண்முக சுந்தரம் தலைமை வகித்தார்.

வரலாறு மீட்புக் குழு தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் மகேசுவரி வாசு, கிருபாகரன் ,திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் முடிகொண்டான் இராமகிருஷ்ணன், வரலாறு மீட்புக் குழு இணை ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு வரலாற்று மீட்புக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் .தங்க சண்முகசுந்தரம் தலைமை வகித்து தெரிவித்ததாவது, வரும் செப்டம்பர் 28 ஞாயிறு தஞ்சையில்நடைபெற உள்ள விழாவில் தன் வாழ்நாளில் மதுபோதை பழக்கமில்லாதவர்களுக்கு 133 பேருக்கு மாமனிதர் குடும்ப விருது வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மேலும் இந்த விருது வழங்கும் நிகழ்வில் உழவனை முன்னிறுத்தும் விதமாக மாமன்னன் இராசராச சோழன் சிலை முன்பாக விருது பெறும் அனைவருக்கும் பச்சைத்துண்டில் பரிவட்டம் கட்டி பாரம்பரிய இசை கருவிகள் முழக்கத்துடன் சிலம்பாட்டத்துடன் ஊர்வலமாக விருதாளர்களை அழைத்து வந்து மாமனிதர் குடும்ப விருது வழங்கப்படும் இந்நிகழ்ச்சிக்கான தஞ்சை மேற்கு காவல்நிலையத்திலும் அனுமதி பெறப்பட்டு விட்டது . மேலும் இந்நிகழ்ச்சி காலை 6 மணிக்கு ஊர்வலமாக துவங்கும் எனவும் விருதாளர்கள் தங்களது குடும்பத்தோடு பாரம்பரிய உடை அணிந்து வர வேண்டும்.

கடந்த ஏப்ரல் 24, 2025 மது அருந்தாதவர்களுக்கு அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள முடிகொண்டான் கிராமத்தில் தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டு திருக்குறளின் 133 அதிகாரங்களை நினைவுபடுத்தும் வகையிலும் திருவள்ளுவரின் மாண்பினை வருங்கால தலைபுறைக்கு எடுத்துச் சொல்லும் வகையிலும் மாமனிதர் விருது 133 பேர்களுக்கு வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டு,அதன்படி 28/09/2025 ல் விருது வழங்கும் நிகழ்ச்சி தஞ்சையில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என வரலாறு மீட்புக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் தங்க சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.