அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், வடுகபாளையத்தை சேர்ந்த வழக்கறிஞர் சி ஜெயபால் , மதிமுகவில் மாநில பொதுக்குழு உறுப்பினரான பதவி வகித்து வந்த இவர் ,தற்போது மதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினராக (ஆன்லைன் மூலம் ) தன்னை இணைத்து கொண்டார்.

இவர் கடந்த 1993 அக்டோபர் மூன்றாம் தேதியில் இருந்து மதிமுக உறுப்பினராகவும் மேடைப் பேச்சாளராகவும் இருந்து வந்தார்.இவர் இவர் தேசியக் கல்லூரியில் பயிலும் போதே திமுக மாணவர் அணி தலைவராக தனது அரசியல் பயணத்தை தொடங்கி, திருமானூர் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்,ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர், என பல பதவிகள் திமுகவில் வகித்து, பின்பு மதிமுக வைகோ தொடங்கியவுடன் , 32 ஆண்டுகளாக மதிமுகவில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர், மாநில பொதுக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகள் வகித்து, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் என்ற அடையாளத்தோடு தனது அரசியல் பயணம் தொடர்ந்த இவர், திடீரென அக்கட்சியில் இருந்து விலகி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில், இன்று ஆன்லைன் மூலம் அக்கட்சியில் உறுப்பினராக இணைந்துள்ளார். நாளை தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் அரியலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
