இன்று மாலை பள்ளிகள் விட்டு மாணவர்,பொது மக்கள் என சர்ச் பேருந்து நிறுத்தத்தில் மக்கள் கூட்டமாக இருந்த நேரத்தில்.
விவேகானந்தா புரம் பகுதியில் இருந்து கன்னியாகுமரி நோக்கி இறக்கமான
சாலையில் ஜேசிபி ஒன்று கடுமையான வேகத்தில் வந்துகொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் சாலையில் தாறுமாறாக ஓடிய ஜேசிபி வேகத்தில் சிவன்கோவில் சுற்று சுவரின் அருகில் உள்ள நடைபாதையில் இடித்து நின்ற நிலையில்.
ஜேசிபி யின் அடியில் சிக்கிய 4_பேர்களில் சம்பவ இடத்திலே இருவர் மரணம் அடைந்த நிலையில்.இருவர் காயங்களுடன் எழுப்பிய மரணம் ஓலம் விபத்தின் தன்மையை எதிரொலித்தது.

சம்பவ இடத்தில் மரணம் அடைந்த இருவரில் ஒருவரான முகமதுஷான்
தமிழக வெற்றி கழகத்தின் கன்னியாகுமரி நகர நிர்வாகி.இதே விபத்தில் மரணம் அடைந்த மைலாடி பகுதியை சேர்ந்த சபரி. கேட்டரிங் கல்லூரி மாணவர்.
விபத்தில் காயம் அடைந்த இருவரையும்,மரணம் அடைந்த இருவரையும் கன்னியாகுமரி காவல்துறை தனி,தனி ஆம்புலன்ஸ் வாகனத்தில் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஜேசிபி ஓட்டுநர் விபத்தின் போது,ஜேசிபியின் கண்ணாடியில் மோதியதில் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் முதல் கட்ட விசாரணைக்கு பின் ஜேசிபி ஓட்டுநர் சிகிச்சைக்காக, நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஜேசிபி சாலையில் ஓடும் அதிவேகமாக ஓடுவதை பார்த்தால்
ஓட்டுநர் மது போதையில் ஒட்டியதாக விபத்தை பார்த்தவர்கள் நினைக்கும் நிலையில்.

ஓட்டுநரது கட்டுப் பாட்டில் ஜேசிபி நிற்காத நிலையில் சுவரில் மோதி நிறுத்த முயன்றபோது இருவர் மரணம், இரண்டு பேர் காயங்கள் 5_க்கும் அதிகமான இரு சக்கர வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது. சம்மந்தப்பட்ட விபத்து குறித்து கன்னியாகுமரி காவல் நிலையம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில்.
குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் மரணம் அடைந்த இருவரது பூத உடல்களையும், விபத்தில் காயம் அடைந்த இருவரையும் நேரில் பார்வையிட்டார்.
முகமது ஷானின் அகால மரணம் கன்னியாகுமரி பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.