கடந்த வருடம் தனியார் சமூக ஊடகத்தில் பெண் காவலர்கள் குறித்து தவறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

அப்போது கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக காவல்துறையினர் சாலை மார்க்கமாக அழைத்து வந்தனர்.
தொடர்ந்து சவுக்கு சங்கரை ஆஜர் படுத்திவிட்டு அரசு மருத்துவமனைக்கு செல்ல முற்பட்ட போது நீதிமன்ற வளாகத்தில் பெண் உதவி ஆய்வாளர் ஜோதிலட்சுமியை தரக்குறைவாக பேசியதாக கூறி, உதவி ஆய்வாளர் ஜோதிலட்சுமி ஜோதிலட்சுமி திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த வழக்கு இன்று திருச்சி நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து சவுக்கு சங்கர் விசாரணைக்கு நீதிபதி பரம்வீர் முன்பு ஆச்சரியப்படுத்தப்பட்டார்.
நேரில் விசாரணை மேற்கொண்ட பின்னர் 12.11.2025 அன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து சவுக்கு சங்கர் திருச்சி நீதிமன்றத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேண்டுமென்றே என் மீது பொய் வழக்கு போட்டு திமுக அரசு அலைக்கழிக்கிறது.
திமுகவை எதிர்த்து யார் பேசினாலும் அவர்கள் மீது வழக்கு தொடர்வது வழக்கமாக உள்ளது.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சார சுற்றுப்பயணம் பொதுக்கூட்டம் எங்கு நடந்தாலும் அங்கு ஆம்புலன்சை வேண்டுமென்றே திமுக திட்டமிட்டு அனுப்புகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் அதிமுக பிரச்சார சுற்றுப்பயணம் பொதுக்கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
திருச்சிக்கு விஜய் வருகை கட்டுப்பாடுகள் விதிப்பது,ஆம்புலன்ஸ் விவகாரம்,எடப்பாடி, விஜய் மீது வழக்கு பதிவு செய்துள்ளது எல்லாம் திமுக அரசின் வேலை தான்.காவல்துறையை கைக்கூலியாக திமுக அரசு பயன்படுத்துகிறது.போலீசார் சோதனையின் போது போலீசாரை தாக்குவது தவறான செயல்.அதேபோல் குற்றவாளிகளை போலீசார் கைது செய்த பிறகு,நீ தவறி விழுந்து மாவுக்கட்டு போடுவதும் தவறான செயலாகும். இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது வழக்கறிஞர்கள் முல்லை சுரேஷ், வரகனேரி சசிகுமார், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.