மதுரை காளவாசல் பைபாஸ் வாசன் ஐ கேர் மருத்துவமனை அருகே மின்கம்பம் ஒன்றில் எதிர்பாராத விதமாக திடீரென வயர்கள் வெடித்து சிதறி தீப்பிடித்து மல மல எரி ஆரம்பித்தது கீழே சுமார் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் நின்று கொண்டிருந்தது.

இதை கண்ட பொதுமக்கள் உடனடியாக மதுரை அரசரடி மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவே உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். மின் இணைப்பை துண்டித்த சில வினாடிகளில் வெடித்து சிதறி கொண்டு இருந்த மின்வயர்கள் தீ மட்டும் பற்றி எரிந்து கொண்டிருந்தது விரைவாக சம்பவ இடத்துக்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் எரிந்து கொண்டு இருந்த தீயினை அனைத்துடன் தீ விபத்துக்கு காரணம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். துரிதமாக செயல்பட்டு மின் இணைப்பை துண்டித்து தீயை அணைத்ததால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மருத்துவமனை வங்கி என பொதுமக்கள் அதிகம் செல்லக்கூடிய பகுதியில் மின்கம்பத்தில் தீ ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது