அரியலூர் மாவட்டத்தில்,இரண்டு BS-V1 புதிய புறநகர் பேருந்து மற்றும் புதிய குளிர் சாதன பேருந்து சேவை தொடக்க விழா. அமைச்சர் சா.சி. சிவசங்கர் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுபடி தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகம் சார்பில், அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி பேருந்து நிலையத்தில், குன்னம் கிளை புறநகர் பேருந்து எண்.TN 45 /N-4811 தஞ்சாவூரில் இருந்து அரியலூர், பெரம்பலூர் வழியாக சேலம் வழித்தடத்திலும், ஜெயங்கொண்டம் கிளை புறநகர் பேருந்து எண்.TN 45/N-4809 ஜெயங்கொண்டத்தில் இருந்து விருத்தாச்சலம், விழுப்புரம் வழியாக சென்னை கிளாம்பாக்கம் வழித்தடத்திலும், விழுப்புரம் கோட்டத்தின் சார்பில் புதிய குளிர் சாதன பேருந்து அரியலூர் பேருந்து நிலையத்திலிருந்து ஜெயங்கொண்டம், விருத்தாசலம், விழுப்புரம் வழியாக மாதவரம் வரை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இரண்டு புதிய புறநகர் பேருந்துகள் (BS V1)ஒரு புதிய குளிர் சாதன பேருந்து சேவை என 3 பேருந்து சேவையினை போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர்சா.சி .சிவசங் கர்,மாவட்ட கலெக்டர் பொ. இரத்தினசாமி,அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா ஆகியோர் முன்னிலையில் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோ ணம் கோட்ட நிர்வாக இயக்குனர் க.தசரதன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்ட நிர்வாக இயக்குனர் கே.குணசேகரன், திருச்சிராப் பள்ளி மண்டல பொது மேலாளர் டி.சதீஷ்குமார், அரசு போக்குவரத்து கழக கோட்ட துணை மேலாளர் புகழேந்திராஜ், அரியலூர் கிளை மேலாளர் குணசேகரன், அரியலூர் மாவட்ட திமுக துணை செயலாளர் கள் சி.சந்திரசேகரன், லதா பாலு, அரியலூர் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் தெய்வ . இளைய ராஜன், நகர திமுக செயலாளர் இரா .முருகேசன், நகர்மன்றத் தலைவர் சாந்தி , தொமுச செய லாளர் பி.வி அன்பழகன் (அரசு போக்குவரத்து கழகம்), நகராட்சி கவுன்சிலர் மு.க. புகழேந்தி, மற்றும் இதர அரசு அலுவலர்கள், போக்கு வரத்து கழக பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்