கன்னியாகுமரி மாவட்டம் பொட்டல்விளை ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலுக்கு ஓணம் பண்டிகை நாளில் கலையரங்கத்தை கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி.டி.செல்வகுமார் சொந்த செலவில் கட்டி திறந்து வைத்தார்.
இவ் விழாவுக்கு ஊர் தலைவர் சி.ராஜலிங்கம் தலைமை வகித்தார். ஊர் நிர்வாகிகள் தங்கத்துரை ராமநாதன் ஈஸ்வரன் சசி செல்வ கண்ணன் நவீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் அன்பையா மனுவேல் வரவேற்றார்.

இவ்விழாவில் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பேசியதாவது: பொட்டல்விளை ஊர் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று இந்த கலையரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகையை நமது மாவட்ட மக்கள் கேரள மக்களுடன் சேர்ந்து மகிழ்வுடன் கொண்டாடுவார்கள் என்பதால் சிறப்பு வாய்ந்த இந்த ஓணம் நாளில் கலையரங்கத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்பதை கடமையாக கொண்டு செயல்பட்டு வருகிறேன். இந்த சேவை என்பது அரசியல் காரணங்களுக்காக அல்ல. ஜாதி, மொழி, மதம், சினிமா என நம் மக்கள் பிரிந்துள்ளனர். இதனால் மக்களின் வாழ்வாதாரம், வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

எனவே, கல்விக்காக சேவையாற்றுவது ஒன்றே சிறந்த மக்கள் பணியாகும். கல்வி சேவையாற்ற இறைவனின் தூதுவர்களாக கிராமங்களுக்கு வரும் சமூக ஆர்வலர்களை ஊக்குவிக்க வேண்டும். மேலும், பெண்களுக்கு தன்னம்பிக்கையை உருவாக்க வேண்டும். கல்விக்காக சாகும் வரை எனது பயணம் தொடரும். இதற்காக மக்கள் தங்கள் ஒத்துழைப்பை தர வேண்டும் என பேசினார்.

இவ்விழாவில், குமரி மாவட்ட கலப்பை மக்கள் இயக்க தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு வள்ளலார் பேரவை தலைவர் பத்மேந்திரா, கலப்பை இளைஞர் அணி அமைப்பாளர் ரவி முருகன், மருத்துவ அணி தலைவர் டாக்டர் நலன் குமார், மகளிர் அணி தலைவி வரலட்சுமி, மகளிர் அணி அமைப்பாளர் அனிதா, அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் செந்தில் மோகன், நாகர்கோவில் மாநகர தலைவர் ஆனந்த், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் கார்மல், சித்தன் குடியிருப்பு சிவா மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் சிவா, கேப்டன் சிவா அடிகளார், மற்றும் பலர் கலந்து கொண்டனர்













; ?>)
; ?>)
; ?>)