மத நல்லிணக்க தலைவரும் இஸ்லாமிய மக்களின் இறைத்தூதருமான நபிகள் நாயகம் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா மிலாது நபி என்ற பெயரில் வெகு சிறப்பாக நாகூரில் கொண்டாடப்பட்டு வருகிறது. .

ரபியுல் அவ்வல் பிறை 12ல் AD 571ல் முஹம்மது நபி சவுதியில் பிறந்தார். அதை சிறப்பிக்கும் வகையில் வருடா வருடம் நாகூரில் விழா போன்று மீலாது நபி பெரு விழாவை கொண்டாடி வருகின்றனர். நாகூரில் ரபியுல் அவ்வல் பிறை 1 முதல் நாள் நாகூர் தர்காவில் பிறை பாத்திஹா முதலே இந்த விழா தொடங்கிவிட்டது. தினமும் மவுலுது மஜ்லிஸ்களும் புகழ் மாலைகளும், தப்ருக் சாப்பாட்டுக்களும் நடைபெற்று வந்தன. 96 வது ஆண்டாக நாகூர் தர்காவில் மவுளுத் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகூர் தர்காவினுள் நாகூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள இஸ்லாமிய பாடசாலைகளில் பயிலும் மாணவர்கலுக்கிடையே பேச்சு போட்டி, கிராத் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்சிசிகளை நாகூர் ஜஸ்னே மிலாது கமிட்டி நடத்தி வருகிறது. கடந்த 50 வருடமாக இந்த பெரு விழா கொண்டாடப்பட்டு வருகிறது . நாகூர் தர்கா நிர்வாகம் சார்பாக வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு புனித குர்ஆன் பரிசாக வழங்கப்பட்டது. மதரஷா ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டூ மதரஸா மாணவ மாணவியருக்காக தர்கா நிர்வாகம் சார்பாக ஆசிரியர்களிடம் அன்பளிப்பு பொருள்கள் வழங்கப்பட்டன. நாகூர் தர்கா பெரிய மினரா பச்சை நிற மின்ஒளியில் அலங்கரிக்கப்பட்டூ அனைவரையும் கவர்ந்தது.
புனித கொடியேற்றம் :-
நாகூர் சாஹிப் ஜாதா சதுக்கத்தில் புனித மிலாது கொடி புனித சலவாத்துடன் தர்கா பரம்பரை டிரஸ்டி செய்யது முஹம்மது கலிபா சாஹிப் புனித துவா ஓதி, கொடி ஏற்றப்பட்டது. ஃபக்கீர்கள் இசை முழங்க விழா துவங்கியது .

பகல் ரெண்டு முப்பது மணி அளவில் சுமார் 2000 இஸ்லாமிய சிறுவர் சிறுமிகள் முகமது நபியின் புகழ் மாலையை பாடியப்படியே நாகூரின் அனைத்து வீதிகளிலும் ஊர்வலமாக சென்றனர் ஊர் மக்கள் அவர்களுக்கு இனிப்புகளையும் விளையாட்டு பொருட்களையும் பரிசுகளாக வழங்கினார்கள். நாகூரின் முக்கிய வீதிகள் மின்விளக்குகளாலும் கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டு நாகூரே திருவிழா கோலம் போன்றிருந்தது குறிப்பிடத்தக்கது.