குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற ஓணக்கொண்டாட்டம் சிறு குழந்தைகளுக்கு உணவை ஊட்டி மகிழ்ந்த சட்டமன்ற உறுப்பினர்.

பெண் எம்.எல்.ஏ VS ஆண் எம்.எல்.ஏ இடையே நடைபெற்ற வடம் இழுத்தல் போட்டியில் ஆண் எம்.எல்.ஏ அணியை தோற்கடித்த பெண் எம்.எல்.ஏ அணியினர்.
கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை (செப்டம்பர்_5)ம் நாள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் குமரி மாவட்டத்திலும் ஓணக்கொண்டாட்டம் களைகட்ட துவங்கி உள்ளது இதன் ஒரு பகுதியாக குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து ஓணக்கொண்டாட்டம் கோலாகலமாக அறுசுவை விருந்துடன் நடைபெற்றது.

இந்த கொண்டாட்டத்தின் போது விளவங்கோடு சட்டமன்ற பெண் உறுப்பினர் தாரகை கத்பட் தலைமையில் பெண் அணியினரும் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் எம்.எல்.ஏ தலைமையிலான ஆண்கள் அணியினருக்கும் இடையே நடைபெற்ற வடம் இழுத்தல் போட்டியில் ஆண் எம்.எல்.ஏ அணியினரை பெண் எம்.எல்.ஏ அணியினர் தோற்கடித்து வெற்றி பெற்றனர். தொடர்ந்து விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் சிறு குழந்தைகளுக்கு அறுசுவை உணவை தனது கையால் ஊட்டி மகிழ்ந்து கொண்டாடியதோடு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஓண வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.













; ?>)
; ?>)
; ?>)