குமரிக்கு பலமுறை வைரமுத்து வந்து, போயிருந்தாலும். இம்முறை தான் அவர் மனதில் வெகு காலம் அடைகாத்த, நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள கலைவாணர் விரும்பி கட்டி,குடி புகுத்து வாழ்ந்த இல்லத்தை தரிசித்தபின் வைரமுத்து வெளிப்படுத்திய நினைவுகளுடன்,

கலைவாணர் வாழ்ந்த வீட்டின் நிலையையும்
ஒரு பதிவாக வெளியிட்டுள்ளார்.
கன்னியாகுமரி சென்று
வரும்வழியில்
என் நீண்டநாள்
ஆசையொன்றை
நிறைவேற்றிக்கொண்டேன்
நாகர்கோயிலுக்குள் புகுந்து
ஒழுகினசேரி எங்கே
என்று விசாரித்தேன்
அங்கு வந்ததும்
கலைவாணர் வீடு எங்கே
என்று வினவினேன்
நான் காணவிரும்பிய
கலைவாணர் வீடு
கலைந்த கூடுபோல்
சிதைந்து கிடந்தது
1941இல் கட்டப்பட்டு
‘மதுரபவனம்’ என்று
பெயரிடப்பட்ட மாளிகை
ஓர் உயரமான நோயாளியாக
உருமாறிக் கிடந்தது
இந்த மண்ணின்
பெருங்கலைஞர் கலைவாணர்
நடித்து நடித்துச்
சிரிக்க வைத்தவர்;
கொடுத்துக் கொடுத்தே
ஏழையானவர்
அந்த வளாகத்தில்
ஒரு நூற்றாண்டு நினைவுகள்
ஓடிக் கடந்தன
எத்துணை பெரிய
கனவின் மீதும்
காலம் ஒருநாள்
கல்லெறிகிறது
கலைஞர்களின்
நிஜமான நினைவிடம் என்பது
மண்ணிலில்லை;
மனசில்
வைரமுத்து