தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திருச்சிராப்பள்ளி, மண்ணச்சநல்லூரில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தினை திறந்து வைத்ததைத் தொடர்ந்து, விழா நிகழ்விடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் அவர்கள் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் ஸ்ரீதர், மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் ராஜேஸ்கண்ணா, பேரூராட்சி தலைவர் சிவசண்முககுமார், செயல் அலுவலர் கிருஷ்ணவேணி, அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் நவநீதன், அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
