தினமலர் ஆசிரியர் ராமசுப்புவின் 60வது சஸ்தியாப்த பூர்த்தி கடந்த 24 ம் தேதி அன்று ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது.

இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கண்டோன்மெண்ட் பறவைகள் சாலையில் உள்ள இல்லத்தில் ராமசுப்பு மற்றும் அவரது துணைவியார் ரேணுகாதேவி ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப குமார் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி
கழக அமைப்பு செயலாளர்கள் மனோகரன் வளர்மதி காமராஜ் சிவபதி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
