திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெய்க்காரப்பட்டி மண்டு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஓட்டுநர் கணேசன் வயது 47 , இவர் இன்று காலை மண்டு காளியம்மன் கோவில் முன்பு உள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த காவலபட்டி முள்ளி செட்டு பகுதியைச் சேர்ந்த சின்ன காளை கரும்பு வெட்டும் இவர்.

கரும்பு வெட்டும் அரிவாளை கொண்டு வந்து ஓட்டுநரை கணேசனை துரத்தி துரத்தி வெட்டியதில் ஓட்டுநர் கணேசன் படுகாயம் அடைந்து பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் சின்ன காளை மனைவியுடன் குடும்பப் பிரச்சினையால் பிரிந்து வாழ்வதாகவும் கணேசன் இவரது மனைவியுடன் தொடர்பில் இருந்ததால் தெரிந்த சின்ன காளை ஓட்டுனர் கணேசனை ஓட ஓட விரட்டி கொலை முயற்சி ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பழனி அருகே ஒருவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொலை முயற்சி ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.