நாகர்கோவிலை அடுத்துள்ள கோட்டார் பகுதியை சேர்ந்தவர் ஜீன்.இவரது கணவர் பெயர் ஜோசப். நகர திமுகவின் துணை செயலாளர். இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தை உள்ளது.

ஜீன்ஜோசப் திருமணத்திற்கு பின்னும் கல்வியை தொடர்ந்து பட்டம் பெற்றார். இந்த நிலையில் இன்று நெல்லை மனோன்மணி சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32_வது பட்டமளிப்பு விழாவில்,
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்கப்பட்ட பட்டியல் படி மாணவிகளுக்கு பட்டம் வழங்கிய நிலையில், நாகர்கோவிலை அடுத்துள்ள கோட்டார் பகுதியை சேர்ந்த தம்பதிகளான ஜீன் ஜோசப் குடும்ப பாரம் பரிய தி மு க குடும்பத்தை சேர்ந்தவர் என்பதுடன். ஜீனியின் கணவர் ஜோசப் நாகர்கோவில் திமுகவின் நகர செயலாளர்.
தமிழ் மற்றும் தமிழர்களை அவமானப்படுத்தும் செயல்களில் ஈடுபடும் ஆர்.என். ரவியிடமிருந்து பட்டத்தை பெற்றுக்கொள்ள மறுத்து துணை வேந்தரிடமிருந்து ஜீன் ஜோசப் பட்டத்தை பெற்றுக்கொண்டார்.

ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இருந்து பட்டத்தை பெற்றுக்கொள்ள மறுத்த மாணவியை,குமரி மாவட்டம் மட்டும் அல்ல ஒட்டுமொத்த தமிழகமே. குமரி வீரப்பெண்ணை பாராட்டி உச்சி முகற்கிறது.