கடலூர் மாவட்டம் திட்டக்குடி மற்றும் பெண்ணாடத்தில் உள்ள வெள்ளாற்றில் கடலூர், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 100 -க்கும் மேற்பட்ட கிராம மக்கள் புதுமண தம்பதிகள், பெண்கள் வெள்ளாற்று மணலில் வினாயகரை பிடித்து வைத்து அதன்மீது தாலியை வைத்து வழிப்பட்டனர்.

புதுமண தம்பதிகள் திருமணத்தின் போது பயன்படுத்திய மாலைகளை தண்ணீரில் விட்டு வழிப்பட்டனர். பொதுவாக நூற்றுக்கணக்கான புதுமண தம்பதிகள் மணமாலையை ஆற்றில் விடுவது வழக்கம் அதற்க்காக திருச்சி, ஈரோடு, சேலம் போன்ற வெளிமாவட்டத்திற்கு சொல்லாமல் சொந்த மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு திருவிழாவை கொண்டாடிய மக்கள்.
