சங்கரன்கோவில், ஜூலை. 31 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள தமிழ் மலர் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் நெல்லை மாநகர திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் காந்தி ஏற்பாட்டின் பேரில் குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது.

குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தை நகர திமுக கழக வழக்கறிஞர் அணி தலைவர் முத்துராமலிங்கம் வழங்கினார். மேலும் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நீதிமன்ற அமைப்பாளர் வக்கீல் பாக்கியராஜ், வக்கீல் சிவராமன், சமூக ஆர்வலர் சங்கர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தாளாளர் ஜீவிதா நன்றி கூறினார்.