கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைந்திருக்கும் பிரபல கே.ஜி திரையரங்கம் கடந்த 1981-ம் ஆண்டு ராகம்,தனம்,பல்லவி மற்றும் அனுபல்லவி என நான்கு திரையரங்குகளாக நிறுவப்பட்டது.

இந்த நிலையில் புத்தம் பொலிவுடன் அந்தாரா ஸ்கிரீனில் நவீன தொழில்நுட்பத்துடன் துவங்கப்பட்டுள்ளதாக திரையரங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 2019-ம் ஆண்டு நான்கு திரையரங்குகளாக இருந்த ஸ்கிரீன்கள் புனரமைக்கப்பட்டு 9 ஸ்கிரீன்களாக தமிழக அரசின் ஒப்புதலுடன் மாற்றப்பட்டுள்ளது.இந்த நிலையில் பல்லவி ஸ்கிரினை இரண்டாகப் பிரித்து வெளிநாட்டுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீன திரைப்பட கருவி மற்றும் உபகரணங்களால் நிறுவப்பட்டுள்ளது.
BARCO 4K LASER PROJECTOR, DOLBY CINEMA PROCESSOR CP-950,DOLBY ATOMS AUDIO,HUGO HARDNESS SCREEN,23 SEAT ADDITIONAL LEG SPACE உள்ளிட்ட தொழில்நுட்பம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என கே ஜி திரையரங்கின் நிறுவனர் மற்றும் தலைவர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.