குமரி மாவட்டம் நாகர்கோயில் மேல ராமன்புதூர் பகுதியை சேர்ந்த மாரிக்கண்ணன் மாவட்ட ஆட்சியர் அலுவல சாலையில் உள்ள ஒரு துணி கடையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் பணியில் இருக்கும் பொழுது அந்த துணி கடையில் ஆடைகள் வாங்குவது போல் நடித்து உள்ளே வந்த இரண்டு இளம் பெண்கள் அங்கிருந்து துணிகளை திருடி சென்றார்கள். இதனை தொடர்ந்து அவர் கொடுத்த புகாரின் பேரில் போலிஸார் சிசிடிவி காமிரா உதவியுடன் துணி கடையில் துணிகளை திருடிய ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த சுகன்யா( 23) மற்றும் திருப்பதிசாரம் பகுதியை சேர்ந்த ஆர்த்தி ஆகிய இளாம் இரண்டு பெண்களை போலிஸார் கைது செய்தார்கள்.

தன்னை அழகு படுத்தி கொள்வதற்காகவும் அதைப்போல் ஆடம்பரமான வசதியான வீட்டின் பெண்கள் போல் தங்களை பிறரிடம் வெளிப்படுத்தி கொள்வதற்காகவும் மேலும் சமூக வாலை தளங்களில் ரீல்ஸ் மற்றும் தங்கள் அழகு புகைப்படங்களை பதிவு செய்வதற்காகவும் இந்த இளம் பெண்கள் திருடர்களாக மாறியுள்ளார்கள். இதற்காக குமரி மாவட்டத்தில் நாகர்கோயில் மட்டுமல்லாது பல பகுதிகளில் உள்ள துணி கடைகள் அழகு சாதன பொருட்கள் கடைகளில் விலை உயர்ந்த ஜீன்ஸ், டி சர்ட் ஆடைகள், வாசனை திரவியங்கள் அழகு சாதன பொருட்களை திருடியுள்ளார்கள். தற்பொழுது கைதான நிலையில் போலிஸார் மேலும் விசாரனை நடத்தி வருகிறார்கள்.